தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி.. இனி வாட்ஸ்அப் இயங்காது!

By Christon
28 Apr 2026, 11:18 AM
பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்ந்து புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கும் திறன் பழைய ஹார்டுவேர் மற்றும் மென்பொருள்களுக்கு இல்லை என்பதால், ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 ஆகிய ஓல்டு வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.

பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பயனர்களின் தரவு பாதுகாப்பு மற்றும் உரையாடல்களின் ரகசியத் தன்மையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் பாதிக்கப்படக்கூடிய பயனர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுவிட்டன. தங்களது முக்கியமான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை இழக்காமல் இருக்க, பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யவோ அல்லது புதிய வெர்ஷன் இயங்குதளம் கொண்ட போன்களுக்கு மாறவோ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.