யதார்த்த ஜோதிடர் ஷெல்வி வழங்கும் இந்த வார ராசி பலன்கள்..
மேஷம்
நிம்மதியும் சந்தோஷமும் நிறையக் கூடிய காலகட்டம். அதேசமயம் செயல்களில் சுறுசுறுப்பு தேவை. தேவையற்ற கொடுக்கல் வாங்கல் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிய நபர்களிடம் ரகசியம் பகிர வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். சுணக்கம் தவிர்த்தால் சுபிட்சம் ஏற்படும். தினமும் சிறிது நேரமாவது தேகப்பயிற்சி செய்வது நல்லது. ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு செழிப்புதரும்.
ரிஷபம்
முயற்சிகள் முழுமையாகப் பலன் தரும் காலகட்டம். வாரிசுகள் உடல்நலத்தில் கவனம் செலுத் துங்கள். அசையும் அசையா சொத்துகளில் நிதானம் தேவை. பயணங்கள் அனுகூலமாகும். பிற மொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். முதியவர்கள் ரெகுலர் செக் அப் தவறவிட வேண்டாம். பணிபுரியும் பெண்கள் இட மாற்றம் வந்தால் ஏற்பதே நல்லது. மேலதிகாரிகளிடம் தர்க்கம் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்வு சேர்க்கும்.
மிதுனம்
திட்டமிடலும், நேரம்தவறாமையும் தேவைப்படும் காலகட்டம். குடும்பத்தில் நிம்மதி இடம் பிடிக்கும். வாரிசுகளிடம் கண்டிப்பு வேண்டாம். பணவரவை சேமிக் கப் பழகுங்கள். தம்பதியர் பிறர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். விசேஷங்களுக்குச் வீண் ஆடம்பரம் தவிருங்கள். கர்ப்பிணிகள் உரிய மருத்து வத்தில் கவனமாக இருங்கள். அலுவலக பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. எதிர்பாலருடன் அதிக நெருக்கம் தவிருங்கள். நரம்பு, மூட்டு உபாதைகள் வர லாம். குருவாயூரப்பன் வழிபாடு குதூகலம் சேர்க்கும்.
கடகம்
நன்மைகள் அதிகரிக்கும் கால கட்டம். இல்லத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். புது வரவுகளும் அதனால் ஆதாயமும் உண்டு. தரல், பெறலில் நிதானம் தேவை. மாதந்தர உபாதைகள் அல்லது ஹார்மோன் உபாதை தெரிந்தால், அலட்சியம் வேண் டாம். பணிபுரியும் பெண்கள் திறமை பாராட்டப்படும். புதிய பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். காய்ச்சல், அலர்ஜி வரலாம். கணபதி வழி பாடு களிப்பு தரும்.
சிம்மம்
சோம்பலும் சுணக்கமும் தவிர்த்தால் சுபிட்சங்கள் ஏற்படும் கால கட்டம். வீட்டில் உங்கள் செல் வாக்கு அதிகரிக்கும். வாரிசுகள் விஷயத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். சகோதர உறவுகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். பழைய கடன்கள் பைசலாகும். குடும்ப ரகசியம் பகிர வேண்டாம். பணிபுரியும் பெண்கள், இடமாற்றத்தைத் தவிர்க்க வேண்டாம். உடனி ருப்போர் ஆதரவு கிட்டும். அல்சர், எலும்பு உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு இனிமை சேர்க்கும்.
கன்னி
தடைகள் நீங்கி உயர்வுகள் உருவாகும் காலகட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வீடு, வாகன மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். சுபகாரியங்களில் தடைகள் நீங்கும். செலவுகளில் நிதானம் அவசியம். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். அலுவலகத்தில் பொறுமையே நல்லது. வாகனத்தில் வேகம் வேண்டாம். கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதில் கவனம் முக்கியம். கழுத்து, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
துலாம்
ஏற்றங்கள் ஏற்படக்கூடிய கால கட்டம். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். வாரிசு களால் பெருமை உண்டு. குடும்பத்துப் பெரியோர் உடல் நலனில் கவனம் தேவை. தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தூக்கமின்மை, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
விருச்சிகம்
ஏற்றமும் மாற்ற மும் ஏற்படத் தொடங்கும் காலகட்டம். குடும்பத்தில் சுமுகச் சூழல் நிலவும். உறவுகளிடம் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணைவருடன் மனம்விட்டுப் பேசுங்கள். குழந்தைகள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். அலுவலகத்தில் பதவி, உயரும். இடமாற்றம் தாமதமாகலாம். பொறுமை முக்கியம். வாகனப் பழுதை உடன் சரி செய்யுங்கள். பாதம், கழுத்து உபாதைகள் வரலாம். முருக வழிபாடு, சந்தோஷம் சேர்க்கும்.
தனுசு
பொறுமைக்குப்பரிசாக பெருமைகள் சேரும் காலகட்டம். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் இருக் கும். வளர்ப்புப் பிராணிகளிடம் நெருக்கம் வேண்டாம். மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் கூடாது. பணிபுரியும் இடத்தில் திறமை உணரப்படும். வீண் பதற்றம் தவிருங்கள்.தொண்டை, அடி வயிறு, உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.
மகரம்
நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். இல்லத்தில் நல்லவை இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணை உடல் நலத்தில் இருந்த சுணக்கங்கள் நீங்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. வாரிசுகளால் பெருமை ஏற்படும். பயணங் களால் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வு வரும். இடமாற்றத்தில் அவசரம் வேண்டாம். கிருமித் தொற்றுகள், மூட்டு, முதுகு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.
கும்பம்
முயற்சிகள் பலன் தரத்தொடங்கும் காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். வாரிசுகளின் வளர்ச்சி மகிழ்ச்சி ஏற்படுத்தும். புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தரு வதைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் வேண்டாம். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். ஜம்பம் தவிருங்கள். தூக்கமின்மை, தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம். மாரியமன் வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.
மீனம்
நிதானத்தால் நினைத்தவை ஈடேறப் பெறும் காலகட்டம். குடும்பத்தில் சுணக்கங்கள் நீங்கும். தேவை யற்ற தரல், பெறலைத் தவிருங்கள். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். வாக்குறுதிகள் அளிப்பதில் நிதானம் தேவை. சமையலறையில் கவனமாக இருங்கள்.யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம். பணியிடத்தில் வீண் ஜம்பம் தவிருங்கள். உடல்நலத்தில் சிறு உபாதையிலும் அக்கறை அவசியம். எந்த சமயத்திலும் சுயமருத்துவம் வேண்டாம்.பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.