ஆன்மிகம்

இந்த வார ராசி பலன்கள் : 12 ராசிகளின் பலன்கள் என்னென்ன?

By Christon
16 Aug 2026, 06:30 AM
இந்த வார ராசி பலன்கள்: 12 ராசிகளின் பலன்கள் என்னென்ன? சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேஷம்:

எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் சுயமுடிவைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். தலைவலி, வயிறு உபாதை வரலாம். துர்க்கையைத் துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.

ரிஷபம்:

முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வரவு சீராகும். சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பற்களில் உபாதை வரலாம். ஏழுமலையானை வணங்குங்கள். ஏற்றங்கள் உறுதியாகும்.

மிதுனம்:

சிந்தித்துச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் அன்னியோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் விலகி இருங்கள். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம். இஷ்டமகானை ஆராதியுங்கள். இனியவை எல்லாம் சேரும்.

கடகம்:

தடைகள் எல்லாம் தகரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்க வாக்குக்கு செல்வாக்கு உயரும். இல்லத்தில் இனிமை நிலவும். அது நிலைக்க, வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க, வாங்க சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரடிக் கவனம் செலுத்துங்கள். அந்நிய தேச வர்த்தகத்தில் தஸ்தாவேஜுகளை பத்திரமாக வையுங்கள். அரசு, அரசியலில் வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது லாகிரி வேண்டாம். வயிறு, முதுகு, உபாதைகள் வரலாம். மாருதியை வணங்குங்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்

சிம்மம்:

சிந்தனையைச் சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிலும் நேரடிக் கவனமும் நிதானமும் அவசியம். குடும்பத்தில் சீரான அமைதி நிலவும். பெரியோர் வாக்குக்கு முக்கியத்துவம் அளியுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். அரசு, அரசியல் துறையினருக்கு நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் நேரடிக் கவனம் அவசியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கணபதியை வணங்குங்கள். இஷ்டங்கள் ஈடேறும்.

கன்னி:

வாக்கில் கவனமா இருக்க வேண்டிய காலகட்டம், பணியிடத்தில் துணிவைவிட பணிவுதான் நல்லது. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்பதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்யம் அதிகரிக்கும். ரத்த பந்தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். அரசு, அரசியல் துறையினர் பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். ரத்தநாளம், மறைமுக உறுப்பு உபாதை வரலாம். நரசிம்மரை வணங்குங்கள், நல்லவை நடக்கும்.

துலாம்:

திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும். பணியிடத்தில் திட்டமிடல் மிகமிக முக்கியம். சிலருக்கு இடமாற்றம் வரலாம், அதனால் பெருமையே சேரும். வீட்டில் விட்டுக் கொடுத்தால், விசேஷங்கள் வரத்தொடங்கும். மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும். சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். புதிய ஒப்பந்தங்களை நேரடியாகக் கவனியுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது, நல்லது. அஜீரணம், தூக்கமின்மை வரலாம். அனுமனை வணங்குங்கள். ஆனந்தம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

கர்வம் தவிர்த்தால், சர்வமும் நன்மையாகும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். விலகி இருந்த உறவுகள் வந்து சேரும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாக்குல இனிமை இருந்தா வாழ்க்கையும் இனிக்கும். குடும்பத்துப் பெரியவங்க உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரண சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். காது, மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம். பயணத்தில் நிதானம் முக்கியம். ஆனைமுகனை வணங்குங்கள். ஆனந்தம் சேரும்.

தனுசு:

பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. யாரிடமும் அலுவலக ரகசியங்களைப் பகிரவேண்டாம். பணத்தை நிதானத்துடன் கையாளுங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். அது தொடர, இன்சொல் முக்கியம். வாரிசுகளால் பெருமை சேரும். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். கலை, படைப்புத் துறையினர் தலைக்கனத்தை இறக்கிவிட்டுச் செயல்படுங்கள். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். நரம்பு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயாரை வணங்குங்கள். பெருமைகள் நிலைக்கும்.

மகரம்:

அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம். பணிமிடத்தில் கவனச்சிதறல் கூடாது. பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். புறம் பேசுவது, கேட்பது கூடாது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் குதர்க்கம் தவிர்த்தால், குழப்பம் மறையும். சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். பூமியால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் முதலீட்டைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். அரசுக்கு உரிய கட்டணத்தைத் தவறாமல் செலுத்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களைத் தவிருங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, படபடப்பு உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

கும்பம்:

நிதானத்தின் பரிசாக நிம்மதியான சூழல் ஏற்படக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியம். பதவி, இடமாற்றங்களை இன்முகத்தோடு ஏற்பது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் வீண் கோபம் வேண்டாம். வரவு அதிகரிக்கும். அதை சுபச் செலவாகவோ, சொத்துகளாகவோ சேமிப்பது நல்லது. செய்யும் தொழில் செழிப்பாகும். தேவையற்ற புதிய முதலீடு வேண்டாம். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். அடிவ யிறு, பாதம், உபாதைகள் வரலாம். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.

மீனம்:

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். பிறரால் பழி வரலாம், கவனம் முக்கியம். குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்துப் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலை, படைப்புத் துறையினருக்கு அந்தஸ்து உயரும். பயணத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அல்சர், தொற்று உபாதைகள் வரலாம். சிவனை வழிபடுங்கள். வாழ்க்கை சிறக்கும்.