முன்னதாக இந்த கூட்டணியில் வெளியான 'அரவிந்த சமேத வீரராகவா' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
புதிய படத்தின் அறிவிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் தளத்தில் மாஸான போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். அதில் திரிசூலம், வேல் மற்றும் DNA வடிவமைப்பு இணைந்திருக்கும் டிசைன் ரசிகர்களை கவர்ந்துள்ளது."ஒரே வேல்... ஒரே நோக்கம்... ஒரே தெய்வீக தீர்ப்பு" என்ற டேக்லைன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
புராணக் கதைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் ஹாலிவுட் தரத்திலான காட்சிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். 'தேவரா' படத்தில் அவரது பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்திலும் அவரது இசை மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் மற்றும் 'என்.டி.ஆர் ஆர்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.