விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா விவகாரத்து நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி , கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காரணமாகக் கூறியும், மற்றும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கீதா, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமண உறவை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், ஜீவனாம்சம் வழங்கவும், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை வேறு தேதிக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஏனென்றால், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் மாற்று தேதிக்கு விஜய் தரப்பு கோரிக்கை வைத்தனர். ஆனால் காணொளி மூலம் சங்கீதா ஆஜர் ஆனதால் இன்றே விசாரிக்கும்படி சங்கீதா தரப்பு கேட்டுக்கொண்டதால், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில் ஆன்லைனில் ஆஜரான சங்கீதா விவகாரத்து கோரிய நிலையில், தற்போது அந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதுசமூக வலைத்தளங்களில் பரப்பரப்பை கிளப்பியுள்ளது.மேலும் விஜயுடன் இணைந்து வாழ முடிவு எடுத்துள்ளாரா இல்லை சங்கீதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பு கிளப்பியுள்ளது.