கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் உயர்க்கல்வி தொடர்பான முறைகேடுகளுக்கு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பாராளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் மாணவர்கள் பேரணியை மேற்கொண்டனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக டெல்லி போலீசார் அவர்கள் இறக்கிமில்லா தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால் மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி பேரணியை கலைத்தனர்.
இதில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமனோர் படுகாயம் அடைந்தனர். போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. ஆனால் கரப்பான் பூச்சி கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது மகிழ்ச்சி தான் ஆனால் எங்களுக்கு தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்கிடையில் ஜூன் 28 ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசடைய மருத்துவமனைக்கு வலுக்கட்டயமாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டார். நேற்று அவரை சந்தித்த மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அவரது கோரிக்கைகள் ஏற்கப்படும் எறு உறுதியளித்துள்ளார் என்றார். அதன் மூலம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாங்சுக் கோரிக்கை வைத்தார். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் அவர், அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன்.
அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, பொறுப்புக்கூறுல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.