அரசியல்

முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஐஏஎஸ்-ஐபிஎஸ் மாநாடு: ஜூன் 29, 30-ல் சென்னையில் முக்கிய ஆலோசனை!

By Sumalekha
19 Jun 2026, 03:15 PM
முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 ஆகிய இரு தேதிகளில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.மாநாட்டின் நோக்கம்: தமிழக அரசின் முக்கிய திட்டங்களை மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை விவாதிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்ட ஆட்சியர்கள் (Collectors), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP), மற்றும் அனைத்துத் துறைச் செயலாளர்கள் (Secretaries) இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் மாவட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சருக்கு அறிக்கை அளிப்பார்கள்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்று தமிழக அரசு சார்பில் நடைபெறும் முதல் ஐபிஎஸ், ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இது என்பது குறிப்பிடதக்கது. தமிழ்நாட்டின் ஆட்சி, நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, முக்கிய நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.