அரசியல்

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

By Sumalekha
11 Aug 2026, 01:15 PM
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அமைச்சர் அருண்ராஜ் கொண்டுவந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் என அனைவரும் முழுமனதுடன் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.

நீட் தேர்வு எதிரான தீர்மானத்திற்கான அமைச்சர் அருண்ராஜ் உரையில் " நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.

தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும், எனவும்

மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல. முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது. நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது. நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன எனவும்,

இறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இந்த தீர்மானத்திற்கு,

எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் (அதிமுக) சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக்கட்சி சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த தே.மு.தி.க. சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ முத்துராஜா திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) சார்பாக ஆதரவை தெரிவித்தார்.

அணைத்துக் கட்சிகளும் முழுமனதுடன் ஒப்புக்கொண்டதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் தவெக அரசு வலியுறுத்தும்படியும் அதற்கு அனைவரும் உங்களுடன் ஒன்றுகூடி நிற்போம் எனவும் தெரிவித்தனர்.