தமிழ்நாடு

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!

By Christon
14 Jul 2026, 11:50 AM
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஹவாலா பணம் பரிமாறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறியுள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால், அமலாக்கத்துறை தானாகவே ஒருங்கிணைந்த போர்ட்டலில் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பின்னணி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை மாநகர போலீசார் இந்த வழக்கில் இதுவரை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஹவாலா பணப் பரிமாற்றம் காரணமாக அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் நுழைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.