தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று ஆறு நாட்கள் கடந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 9 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய்யும், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்று அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி நடத்த ஏதுவாக முக்கியத் துறைகள் மூத்த மற்றும் இளம் அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் வசம் உள்ள துறைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கட்டுப்பாட்டில் முக்கியத் துறைகளை வைத்துள்ளார். அதன்படி, காவல், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, பொது நிர்வாகம் ஆகிய முக்கியப் பொறுப்புகளை முதலமைச்சரே நேரடியாகக் கவனிக்க உள்ளார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத் துறைகள்
அமைச்சரவையில் உள்ள மற்ற முக்கியப் பொறுப்புகள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன:
என். ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள்.
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித் துறை(கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
கே.ஜி. அருண்ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நால்வாழ்வுத் துறை
செங்கோட்டையன் - நிதித் துறை (நிதி, ஓய்வூதிங்கள்)
வெங்கட ரமணன் - உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை.
சிடிஆர் நிர்மல் குமார் - மின்சாரம் மற்றும் சட்டத் துறை
ராஜ் மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை
டி.கே. பிரபு - கனிமவளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை
கீர்த்தனா - தொழில் துறை
துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அனைவரும் தங்களது துறைகளுக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.