சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாகச் சரிந்துள்ளது. தங்கத்தைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று ரூ.240 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று தங்கம் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நீடித்த ஏற்ற, இறக்கத்திற்குப் பிறகு இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் போலவே, இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.