கடந்த சில நாட்களாகவே சரிவைச் சந்தித்து வரும் தங்கம் விலை, இன்றும் அதிரடியாகக் குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே சரிவுப் பாதையில் பயணித்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 23) சவரனுக்கு ரூ.720 குறைந்திருந்த நிலையில், இன்றும் விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.480 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையிலும் பெரும் வீழ்ச்சி
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாகச் சரிந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.5,000 குறைந்து, ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்தத் தொடர் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.