இந்த வாரம் தொடக்கம் முதலே தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் சற்று உயர்வைக் கண்டுள்ளது.
தங்கம் விலை
கடந்த ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,200 வரை குறைந்திருந்தது. அதன் பிறகு, ஜூலை 15-ல் ரூ.240 உயர்ந்தும், ஜூலை 16-ல் ரூ.240 குறைந்தும் காணப்பட்டது. நேற்று (ஜூலை 17) சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனையான தங்கம் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது.
அதன்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத் தொடர் ஏற்ற, இறக்கங்கள் நகைப்பிரியர்கள் மத்தியில் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை இன்று உயர்வைக் கண்டுள்ள போதிலும், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனையான வெள்ளி, இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி எந்தவித மாற்றமுமின்றி ரூ.2,35,000 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.