தமிழ்நாடு

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.400 சரிவு!

By Christon
22 Apr 2026, 10:13 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் நிலவி வந்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகச் சரிந்துள்ளது. இது நகை வாங்குவோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், இன்று காலை விலை சரிவைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்திருந்த நிலையில், நேற்று விலை நிலையாக இருந்தது. இன்று மீண்டும் ரூ.400 குறைந்திருப்பது, தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றமில்லாத வெள்ளி விலை

தங்கம் விலை சரிந்தாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்திருந்த நிலையில், இன்றும் ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,75,000 ஆக நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.