தமிழ்நாடு

வார தொடக்கத்தில் நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

By Christon
06 Jul 2026, 10:19 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை

சென்னையில் கடந்த வாரம் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று வாரத் தொடக்கத்திலேயே கணிசமாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,560-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலைத் வீழ்ச்சியை விடவும் இன்றைய வெள்ளி விலையின் சரிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.10,000 விறுவிறுவெனக் குறைந்து, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,50,000 லட்சம் ஆகக் சரிந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.