தமிழ்நாடு

மாதத்தின் முதல் நாளே இப்படியா? தங்கம் விலை மீண்டும் உயர்வு!

By Christon
01 Sep 2026, 10:19 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பின்னர் கடந்த ஒரு வாரமாக கணிசமான சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மாதத்தின் முதல் நாளான இன்று (செப்.1) மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,385-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகி வருகிறது.