கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று குறைந்திருந்த நிலையில் இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240-க்கு விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக, வாரத்தின் இறுதி நாளான இன்று (மே 23) தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்து நடுத்தரக் குடும்பத்தினருக்கும் நகைப்பிரியர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.400 சரிந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனையாகி வருகிறது.
மாற்றமில்லாத வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஆபரண வெள்ளி விலை நேற்றைய விலையிலேயே நீடித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை மாற்றமின்றி இன்றும் ரூ.2,95,000-க்கு விற்பனையாகி வருகிறது.