கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,480-க்கு விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான இன்று (மே 22) தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்து நகைப்பிரியர்களுக்குச் சிறிய அளவிலான நிம்மதியை அளித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.240 சரிந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,240-க்கு விற்பனையாகி வருகிறது. சந்தையில் நிலவும் சர்வதேசச் சூழல்களால் தங்கம் விலை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது.
வெள்ளி விலை மீண்டும் அதிகரிப்பு
தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.5,000 அதிகரித்து, இன்று ரூ.2,95,000-க்கு விற்பனையாகி வருகிறது.