சென்னையில் கடந்த சில நாட்களாக அதிரடி ஏற்றத்தைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இன்று சற்றே குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,070-க்கும் விற்பனை செய்யப்பட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்றைய தங்கம் விலை
இத்தகைய தொடர் விலை ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, இன்று ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைப் பின்பற்றி இன்று வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,75,000 ஆகக் குறைந்துள்ளது.