தமிழ்நாடு

தனியார் விடுதியில் காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. காதலனின் விபரீத முடிவு!!

By Kumudam Team
25 Apr 2026, 05:23 AM
சென்னையில் விடுதி ஒன்றில் காதலியை கொலை செய்து விட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த பவ்யா, சென்னையில் வசிக்கும் பாரதி பெருமாளைக் காதலித்தார். பாரதி பெருமாள் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணமாக பெற்றோர் எதிர்த்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் பவ்யாவிற்கு வேறொருவருடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.

தற்போது நர்சிங் இறுதித் தேர்வு எழுதச் சென்னை வந்த பவ்யாவைச் தனியார் தகும் விடுதியில் சந்தித்த முன்னாள் காதலன் பாரதி பெருமாள், தன்னுடன் வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். பவ்யா மறுக்கவே, ஆத்திரத்தில் பழம் வெட்டும் கத்தியால் அவரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.