ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்ததால் இத்திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழகம் மட்டுமன்றிப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்ற நிலையில், இத்திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு இன்று புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி 'பேபி கண்ணன்' என்ற வித்தியாசமான பாத்திரத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சாய் அபயங்கர் இசையமைப்பில், ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து இன்று (ஜூன் 12) அமேசான் பிரைம் ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகி தற்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
The roaring divine blockbuster of the year 💥#Karuppu enters its unbeatable 5th week with 340+ CRORES WORLDWIDE GROSS!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 12, 2026
The ONE @Suriya_offl's mega blockbuster.
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar Musical.
A @dop_gkvishnu Visuals.#KaruppuBlockbuster… pic.twitter.com/phZnufMibe