சினிமா

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்: திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்!

By Christon
30 May 2026, 10:09 AM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தாயார் மோகினி (84), இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தாயார் மோகினி (84), இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இத்தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 2023-ஆம் ஆண்டு தனது 85-ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. தற்போது படப்பிடிப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகத் துபாயில் இருக்கும் நடிகர் அஜித், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாகச் சென்னை விரைந்து கொண்டிருக்கிறார். அஜித்தின் தாயார் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.