மெடிக்கல் ரெப் விஷாலுக்கு அழகான மனைவி, துஷாரா விஜயன். இவர்களுக்குச் செல்லமான ஒரு மகன், அழகான ஒரு மகள். தன் பிள்ளைகளுக்காக ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்று கடுமையாக முயல்கிறார் விஷால். முடியவில்லை. வேறு வழி இல்லாமல் போராடி, ஒரு பழைய பி.எம்.டபிள்யூ. காரை குறைந்த விலைக்கு வாங்குகிறார்.
அந்தக் காரில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் ரவுடிகள் சிலர் அந்தக் காரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட, மனைவியும் மகளும் இறந்துவிடுகின்றனர். மகனை மட்டும் காப்பாற்றுகிறார், விஷால். சுட்டவர்கள் யார், எதற்கு விஷாலைக் குறி வைக்கிறார்கள் என்று அந்த இடத்தில் சூடுபிடிக்கிறது படம்.
திரைக்கதை, இயக்கம் விஷால். அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நன்றாகவே நடித் திருக்கிறார். மகனுக்கு ஜோடியாக வரும் துஷாரா விஜயன் சிறிது நேரமே வந்தாலும், நெஞ்சில் நிற்கிறார். அப்பா விஷாலுக்கு ஜோடியாக வரும் அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல, ஆட்டத்திலும் அசத்துகிறார். ஜான் விஜய், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் கேரக்டர்கள் அழுத்தம்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணிஇசை நன்று. பாடல்கள் சுமார். ஒளிப்பதிவு ஓகே. எடிட்டிங் சுமார். ஆக்ஷன் காட்சிகள் அதிரடி. க்ளைமாக்ஸில் பெண்கள் ஆயுதங் களோடு வந்து வில்லனைத் துவம் சம் செய்வது வேற லெவல்! இயக்கு நராகத் தேறியிருக்கும் விஷால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். போலி உதிரி பாகங்கள் பற்றிய எச்சரிக்கை கதையோடு ஒட்டவில்லை. ஆரம்பத் தில் அரைமணி நேரம் காட்சிகள் நத்தை போல் நகர்வதைக் குறைத் திருக்கலாம்.
'மகுடம்' -விஷாலுக்கு மறுபிறவி!