அரசியல்

மாணவர்கள் போராட்டம்: RSS யுக்தியை முன்னெடுக்கிறதா த.வெ.க. அரசு?

By Sumalekha
19 Aug 2026, 04:38 PM
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, கல்லூரிக் கல்வி ஆணையர் கடந்த 17-ஆம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில்,
“மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு இடையே துறை சார்ந்த தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இது மிக அவசரம்” என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, தமிழ்நாட்டில் மாணவர்கள் அரசியல் மற்றும் சமூக போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரவு:

முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சுற்றறிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அய்யாசாமி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறிப்பிட்ட கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தற்போது வெளியாகியுள்ள சுற்றறிக்கை, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றறிக்கை வாபஸ்:

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, கல்லூரிக் கல்வி ஆணையர் கடந்த 17-ஆம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த உத்தரவு அரசியல் தலைவர்களிடையே கடும் சர்ச்சையையும்,தொடர் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் அந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றது. மத்திய அரசிற்கு எதிராக தொடரப்படும் போராட்டங்களில் பங்குபெறுவோரை தடுக்கும் முயற்சியை தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு முன்னெடுத்திருப்பதாகவும், கொள்கை எதிரி என்று கூறிக்கொண்டு RSS யுக்தியைதான் இந்த அரசு செயல்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.