அரசியல்

வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை... தேர்வு சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

By Christon
30 Jul 2026, 03:30 PM
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று ( 30.07.2026 ) பொதுத் தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது.இந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் சார்பாக பெரும் போராட்டத்தை நடத்திய போது மாணவர்கள் மீது அடக்குமுறையும் அவர்களை கையாண்ட விதமும் மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாகவும் எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

இதனால் கூட்டத்தொடரின் அவை நண்பகல் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 2 மணி அவை கூடியபோது குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் தேர்வு சீர்த்திருத்த மசோதா நிறைவேற்றியது. தேர்வு சீர்த்திருத்த மசோதா நிறைவேறிய பின்பு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால் ஒரு மாதத்திற்கும் மேலாக வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு ஒரு தெளிவான சட்ட ரீதியிலான பதில் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.இதனால் அவை நண்பகல் 12 மணி வரையும் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு அவை கூடிய போது பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய புவி அறிவியல் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

அவர் பேசும் போது எதிர்க்கட்சிகளில் தொடர் இடையூறுக்கு பிறகு 10 மணி நேர விவாதத்திற்கு பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து மசோதா தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. மேலும் வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்கள் கண்டறியப்பட்டால் அவருக்கு ரூ 50 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவில் ஈடுப்படக் கூடிய அமைப்புகளையும் கண்டறியப்பட்டு ரூ 10 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.