தமிழ்நாடு

இதுக்கு ஒரு முடிவே இல்லையா! தொடரும் தங்கத்தின் விலை உயர்வு... புலம்பும் பெண்கள்

By Sumalekha
24 Aug 2026, 02:15 PM
தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில் இது நகை வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி தங்கம் "ஒரு கிராம் ரூ 14,200 க்கும்,  சவரன் ரூ 1,13,600 க்கும்", விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் (22.08.2026) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை "கிராமுக்கு ரூ 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,950க்கும் சவரனுக்கு ரூ 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,19,600க்கும்" விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. அதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு "ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ15,030 க்கும்,சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,20,240 க்கும்" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இன்று "ரூ 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 275க்கும், ஒரு கிலோ ரூ 2,75,000க்கும்" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.