தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1560 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.8,800-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.