தமிழ்நாடு

Gold price today: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏற்றம்.. இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது.

Gold price today: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏற்றம்.. இன்றைய நிலவரம்
Gold rate at chennai
கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதனிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கவிலை சட்டென்று உயர்ந்து சவரனுக்கு ரூ.70,000-த்தை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இருந்தே உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டது. அதில் தங்கமும் தப்பவில்லை. தற்போது வரி விதிப்பு உத்தரவினை இடைநிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் கொஞ்சம் உயிர்ப்பெற்றது. தங்கத்தின் விலையும் கடந்த 3 நாட்களாக சரிவில் இருந்தது.

சென்னையில் தங்கத்தின் விலை என்ன?

நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,720 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.95 வரை அதிகரித்து ரூ.8,815 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.765 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.70,520 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 20 காசுகள் அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.110 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!