கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன்(21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி(20) உள்ளிட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு, தற்போது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த மூவர் மீதும் 250 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 72 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து மார்ச் 7ம் தேதி (இன்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தராஜன் அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று பிற்பகல் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முன்னதாக பலாத்கார வழக்கில் தொடர்புடைய கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் இன்று பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்டன. பின்னர் 2.05 மணியளவில் நீதிபதி சுந்தராஜன் கோர்ட் அறைக்கு வந்தார். பின்னர் அவர் தீர்ப்புகளை வாசிக்கத் தொடங்கினார்.
முதலில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜன் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தீர்ப்பு வாசித்த அவர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 7 லட்சமும் ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

LIVE 24 X 7