K U M U D A M   N E W S

உலகம்

வைரல் வீடியோ: அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடல்: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கப் புதிய முயற்சி!

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.

இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்?

இலங்கைக்குப் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில், அதன் காலாவதித் தேதி முடிந்திருந்ததால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் 'வாண்டட்' லிஸ்ட்: லலித் மோடியின் 63வது பிறந்தநாள் விருந்தில் மல்லையா கூத்தாட்டம்!

இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயல்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்!

'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 150 தமிழர்கள் சிக்கி தவிப்பு!

இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 31 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்!

ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

இந்தியா - பாகிஸ்தான் போரை வரியை வைத்து நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

சிட்னியில் கோர சம்பவம்.. நிறைமாத இந்திய கர்ப்பிணி சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்து ஒன்றில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமன்விதா தாரேஷ்வர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி.. சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் இன்று அறிவித்துள்ளது.

டெல்லி கார் வெடிப்பு: "பயங்கரவாதம் நமது ஆன்மாவை அசைக்க முடியாது"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

"பயங்கரவாதத் தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு.. 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

'நீங்கள் அழகாக உள்ளீர்கள்'.. இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து டிரம்ப் கலகல பேச்சு!

எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி.. நவம்பர் 1 முதல் கூடுதலாக 100% வரி விதிப்பு அறிவிப்பு!

நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

"நோபல் பரிசை அதிர்பர் டிரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்"- மரியா மச்சாடோ அறிவிப்பு!

தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

2025 இலக்கிய நோபல் பரிசு... ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொடூரம்.. சண்டையை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளி சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் உணவகம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேபாளத்தை புரட்டிப் போடும் கனமழை.. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.