ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி ஆகியோர் ஜூலை 2025-க்கான ICC சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் KTM பைக்குகளுக்கு எப்பவும் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் அப்பாச்சி RTR 160 4v, யமஹா MT-15 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் KTM 160 Duke பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் சிவாஜியின் பேரன் தர்ஷன்.
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.