மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மயிலாடுதுறையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”மத்திய பாஜக அரசு நேற்று அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் மூன்று புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே, UAPA சட்டம் என்ற பெயரில் பாஜக அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் விசாரணை இல்லாமல் காலவரையின்றிச் சிறையில் அடைக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் ஏராளமான அறிஞர்கள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டனர்.
பின்னர், பொதுமக்களையும் கைது செய்யக்கூடிய வகையில் BNS என்ற புதிய சட்டத்தைத் திருத்தினார்கள். இப்போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்பட யாராக இருந்தாலும் 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும் என்ற புதிய மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் வழக்கு பதிவு செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்றவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், பிடிக்காத முதலமைச்சர்கள், அமைச்சர்களைக் கைது செய்து 30 நாள்களுக்கு மேலாகச் சிறையில் வைக்க முடியும். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கும், மாநில அரசுகளின் உரிமைகளுக்கும் எதிரானது.
இது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்குப் பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக்கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது. பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கிறது என்ற ஆணவத்தில் தாங்கள் நினைக்கும் வகையில் சட்டத்தை உருவாக்குவது ஒரு ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாதது.
இந்தியாவின் கூட்டாட்சியை மதிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டிய மசோதா இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தப் புதிய மசோதாவை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துவோம். தமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர் ஆகியோர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மத்திய அரசு உடனடியாக இந்தப் புதிய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
தவெக மாநாடு குறித்த கேள்வி:
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பந்தலில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இதுபற்றி அவர்களைக் கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ள திமுக, அதிமுக கட்சிகள்தான் முதலில் கருத்து கூற வேண்டும் என்றார் பெ.சண்முகம். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் துரைராஜ், கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் முருகையன் ஆகியோர் உடனிருந்தனர்.