தமிழ்நாடு

பள்ளிக்குள் புகுந்த உடும்பு.. மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

By Jayakumar
10 Jun 2025, 10:56 AM
காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 9) மதியம் பள்ளியின் அருகில் இருந்த புதரிலிருந்து சுமார் 2 அடி நீளமுள்ள உடும்பு திடிரென பள்ளிக்குள் நுழைந்தது.

இதனை கண்ட இளைஞர்கள் சிலர், உடும்பை பிடித்து வைத்துக் கொண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்த வனத்துறையினர் இளைஞர்களிடம் இருந்து உடும்பை வலைக்குள் போட முயற்சி செய்தனர்.

அப்போது, வனத்துறையினரிடம் தப்பிய ஓடிய உடும்பு, பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து . இதனால் பயந்துபோன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

இதனையடுத்து ஒருவழியாக தப்பி ஓடிய உடும்பை வனத்துறையினர் பிடித்து கொண்டுச் சென்றனர். உடும்பு வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.