தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று இயற்கை வளங்கள்துறை,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 வரையும் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரியவில்சன் மற்றும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை குறித்து விவாதம் ஆகஸ்ட் 7,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்று 12 ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17 ஆம் தேதி கூடியபோது மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இது வரை நடைபெற்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை,நீர்வளத்துறை,மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை,பள்ளிக்கல்வித்துறை,உயர்க்கல்வித்துறை உள்ளட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் இயற்கை வளங்கள் துறை,தொழில்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு.தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா,தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.
இதனிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்ட அனைவரும் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளார். தேர்தல் வாக்குறுதியாக 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக முதலில் 3 சிலிண்டர்கள் அன்னபூரணி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் இது பொங்கலுக்கு நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அறிவித்தார். மேலும் வெற்றிப்பயணம் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் மாநகரங்கள் மற்றும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் போன்ற பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயனிக்கலாம் என்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்து மூன்று அதிரடியான அறிவிப்புகளை நேற்று முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற கூடிய கூட்டத்தொடரில் ஏதேனும் அறிவிப்புகள் இடம்பெறுமா? குறிப்பாக தொழில்துறை குறித்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்க்கட்சியினர் திட்டம் என்னவாக இருக்கும் இப்படி பல கேள்விகள் எழுகின்றன.