நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் போரணி நடத்த முயற்சித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தீவிரமாக தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, கல்வி முறை மற்றும் தேர்வு முறைக்காக மாணவர்கள் போராடி வருகின்ற நிலையில் கல்வி முறை சீர்குலைந்து விட்டன என்பது நாட்டுக்கே தெரியும். அவை நடைமுறையில் செயலிழந்து விட்டன.
இதைத்தான் இளைஞர்கள் கூறுகிறார்கள் நாங்களும் இதைத்தான் கூறி வருகிறேன். ஆனால் பிரதமர் டெல்லி இவ்வளவு பெரிய அதிர்வலைகளை கிளப்பும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இது குறித்து எந்த வொரு கேள்வியும் நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் இளைஞர்களை இப்படி நடத்தக்கூடாது. அவர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல், அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு என்ற ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது, அதுவும் இப்போது சிதைக்கப்பட்டுவிட்டது. நமது மாணவர்கள் கல்வி முறையைப் பற்றி மட்டுமல்ல, தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இது இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம். அம்பானி வீட்டுத் திருமணத்துக்காக ரூ. 1,000 கோடி செலவிடப்படுவதை அவர்கள் பார்க்கிறார்கள். அதே வேளையில், சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கக்கூட அவர்களிடம் பணம் இல்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதானும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி நரேந்திர மோடி வீட்டை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரின் எம்பிக்களுடன் தர்ணா போராட்டத்தில் கையில் எடுக்க உள்ளனர்.
இந்த போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் நரேந்திர மோடியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது மேலும் போராட்டத்தை கைவிட மீண்டும் தடியடியை மேற்கொள்ளமா என்ற பெரும் கேள்வி எழுந்து வருகிறது.