K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்; 'ஜெய்பீம்' முழக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்!

வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பெட்டியில் என்ன வாசகம் இடம் பெற்றது?

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட உள்ள சந்தனப்பெட்டியில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் என்று எழுதப்பட்டு உள்ளது.

ஜெ.பி.நட்டா மாறிவிட்டார்... எய்ம்ஸ் மட்டும் அப்படியே உள்ளது - சு.வெங்கடேசன் தாக்கு

ஜெ.பி.நட்டா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரான நிலையில், எய்ம்ஸ் பணிகள் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் உள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் - இன்று பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகவுள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டது.

பொளந்து கட்டிய அபிஷேக் ஷர்மா - 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

8 மணி நேர சோதனை; ஆவணங்களை எடுத்துச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் - சிக்குவாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவடைந்தது.

Armstrong வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும்! - ஷாலின் மரியா லாரன்ஸ்

Armstrong-ன் விவகாரம் இதோடு முடியாது தொடரும்.. - Journalist Varahi Exclusive Interview

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சைபர் மோசடிக்காக தமிழர்கள் கம்போடியோவிற்கு கடத்தல் - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்குகள்

சைபர் மோசடி செயலுக்காக கம்போடியோவிற்கு தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

'தம்பி ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பேரிழப்பு'... சீமான் உருக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்துள்ளதற்கு காரணம், அவர் தான் கற்ற கல்வியை மற்றவர்களும் படிக்க உதவி செய்ததுதான்''

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 'தல' தோனி... நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகம்... பிரபலங்கள் வாழ்த்து மழை!

களத்தில் நொடிப்பொழுதில் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக இளம் வீரர்களை வழிநடத்தும் திறன், இந்திய அணி தோல்வியை நோக்கி 99% செல்லும் நிலையிலும், சிறந்த பினிஷிங் திறன் மூலம் அணியை வெற்றி பெற வைக்கும் விதம் ஆகியவை தோனியை மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து ஒருபடி முன்னே வைக்கிறது.

'இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதி'... பொங்கிய சு.வெங்கடேசன்... மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம்!

''சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்''

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை... ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி குற்றச்சாட்டு!

''தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், நமக்கு என்ன நிலை ஏற்படும்? என எளிய மக்கள் அஞ்சுகின்றனர். ஆகேவ சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்''

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

இளைஞர்களின் 'ரோல் மாடல்' ஆம்ஸ்ட்ராங்... அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றி மாறன் உருக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது மறைவு எல்லாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உதவியால் ஏராளமான இளைஞர்கள் படித்து முன்னேறியுள்ளனர்''

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... அடுத்தது என்ன?... போலீசார் விளக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்''

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.

HBD MS Dhoni : மகேந்திர சிங் தோனி: ஒரு தலைவன் இருந்தான்!

பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். 2007 20 ஓவர் உலகக் கோப்பையில் ஜோகீந்தரைப் பந்து வீசச் செய்தது அப்படிப்பட்ட முடிவுகளில் ஒன்று. அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த முடிவு அது.

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.