K U M U D A M   N E W S

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய், தந்தையோடு தகராறு.. தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன்..போதையால் சிதைந்த குடும்பம்..

கூடலூர் பி.வி.சி நகரில் தாய், தந்தையோடு தகராறில் ஈடுபட்ட போது தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன். இளைஞரின் போதை பழக்கத்தால் சிதைந்த குடும்பம் 

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

த.வெ.க. முதல் மாநாடு - வெளியான முக்கிய தகவல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி

தென் ஆப்பிரிக்காவை ‘ஒயிட்-வாஷ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது.

காளான் வளர்ப்பவரா நீங்கள்? அரசு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு இதோ!

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்

சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு இனிப்பான செய்தி.. 150 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

150 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

#BREAKING | ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.. சென்னை அருகே பரபரப்பு

கரூரில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு காட்பாடி அருகே மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.... சோகத்தில் நகைப் பிரியர்கள்.. எப்போது குறையும்?

குறைவது போல் குறைந்து தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது குடும்பத் தலைவிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Formula 4 Chennai | ஃபார்முலா 4-க்கு தடைக்கோரிய வழக்கு - எப்போது விசாரணை?

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BREAKING| ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.. பாலியல் விவகாரம் குறித்து பாடகி சின்மயி கருத்து..

மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

BREAKING | கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையின்றி மூடல்..காரணம் என்ன?

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

Me Too ஒரு பெண்ணாகவும் தாயாகவும் எனது மனம் பதறுகிறது... நடிகை குஷ்பு எமோஷனல் ட்வீட்!

பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

VidaaMuyarchi VS Viduthalai 2: கிறிஸ்துமஸ் ரேஸில் விடாமுயற்சி VS விடுதலை 2… அஜித்துடன் மோதும் சூரி!

இந்தாண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக விடாமுயற்சி, விடுதலை 2 படங்கள் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டுக்கு புதிய வந்தே பாரத் ரயில்கள்... ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன்.. பணத்தை என்ன செய்தார்? விசாரிக்கும் போலீஸ்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. மோசடி செய்த பணத்தில் தேவநாதன், பினாமிகள் பேரில் எந்தெந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்?, மோசடி செய்த பணத்தில் தேவநாதன், குடும்பத்தாரின் பெயரில் வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை.

மரண தண்டனைதான் சரியான தீர்வு.... இயக்குநர் அமீர் ஆவேசம்!

பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

#BREAKING | பரந்தூர் விமான நிலையம்.. விறுவிறு பணிகள்.. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

நிதி மோசடி வழக்கு: தேவநாதன் போட்ட திட்டம் என்ன?.. போலீசார் தீவிர விசாரணை..

நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.