லைஃப்ஸ்டைல்

மழை, குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு வழிகள்!

குளிர்காலம், மழைக்காலம் வந்து வந்து விட்டாலே பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவது வழக்கமாக உள்ளது. அதுவும் காய்ச்சலுடன் சளியும் சேர்ந்தால் நமது தொண்டைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொற்று நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது தொண்டை கட்டுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை கமறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம்.

மழை, குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு வழிகள்!
மழை, குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு வழிகள்!
சளி இருமல் காய்ச்சல் போன்றவற்றினால் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், சளி, காய்ச்சல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன.  சரியான நேரத்திற்கு உணவு எடுக்க முடியாமலும், சாப்பிட முடியாமலும் பலர் கஷ்டப்படுவதை நாம் பார்த்திருப்போம். பாக்டீரியா தொற்று, சுவாச நோய் பாதிப்பு ஒன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் அதுபோன்ற நேரங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சரிசெய்யலாம்.

தொண்டை கரகரப்பு

சைனஸ் தொற்று போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடுகளால், தொண்டை சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் நம்மை தாக்குகிறது. இது போன்ற நேரங்களில் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்றவை அதிக அளவில் ஏற்படுகிறது. தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் சுடு தண்ணீரில் உப்பினை போட்டு நன்றாக கொப்பளிப்பதன் மூலம் கரகரப்பு நீக்கப்படுகிறது. மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் சேர்த்த பாலினை தேன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமும் தொண்டை கரகரப்பு சரியாகும்.

தொண்டை வலி

காய்ச்சல், சளி போன்ற நேரங்களில் தொண்டை வலி மிகவும் அதிகமாக காணப்படுவதால் சிலருக்கு பேச முடியாத சூழலும் ஏற்படும். இது போன்ற நேரங்களில் சுண்ணாம்பும், விளக்கெண்ணையும் சூடு செய்து தொண்டையில் தடவி வருவதன் மூலம் வலி படிப்படியாக குறையும்.

தொண்டை புண்

சளி இருமல் போன்று தொடர்ந்து இருக்கும் பொழுது அது போன்ற தொற்று நோய்களால் மட்டுமே தொண்டை புண் ஏற்படுகிறது. தொண்டை புண் லேசான எரிச்சல் போன்றவை அதிகரித்தால், வேப்பம்பூவை சுடு தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டை புண் விரைவில் ஆறும். மேலும் கிராம்பை நன்றாக தீயில் வாட்டி அதனை சாப்பிட்டு வருவதன் மூலமும் தொண்டைப்புண் படிப்படியாக குணமாகும். தொடர்ந்து தொண்டைப்புண் அதிகரித்து காணப்பட்டால் உடனே  மருத்துவரை நாடி மருந்துகளை உட்கொள்வது சிறந்த பயணளிக்கும்

இதுதவிர தினசரி உணவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மாஸ்க் அணிந்து கொள்வதும், குளிர்ந்த காற்றில் திடீரென வெளியே செல்வதை தவிர்ப்பதும் உடல்நலனை பாதுகாப்பாக வைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், இயற்கையாக நீங்கள் மேற்கொள்ளும் வழிகளில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.