செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு மாநாடு” இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில், மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து பங்கேற்கின்றனர். பாமகவில் சமீபகாலமாக தந்தை, மகனுக்கிடையே நடந்து வந்த பிரச்னைக்கு பிறகு இருவரும் இணைந்து பங்கேற்கும் மாநாடு என்பதால், பாமக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மட்டுமில்லாது, பிற அரசியல் கட்சித்தலைவர்களும் மத்தியிலும் இந்த மாநாடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுடன் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றிய பிறகு, அவர் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, அன்புமணியும், நிறைவாக ராமதாஸும் உரையாற்ற இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக எல்இடி திரைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான முக்கிய வரலாற்று தொகுப்புகள் அடங்கிய புகைப்படங்கள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு கட்சி தொண்டர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவவசதி, ஆம்புலன்ஸ்கள், வாகனங்கள் பழுது பார்ப்பதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.