விருகம்பாக்கம் பகுதியில் பாஜகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு திறந்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,
சூரியன் ரொம்பத் தொல்லை கொடுக்கிறது. சூரியன் தொல்லை கொடுப்பதால் தான் முதலமைச்சர் அடிக்கடி ஊட்டி சென்று விடுகிறார். அவராலே சூரியனைத் தாங்க முடியவில்லை. மக்கள் எல்லாம் சூரிய வெப்பத்தில் இருக்க வேண்டும், ஆனால் அவர் அங்கு போய் மலர் கண்காட்சி பார்த்துவிட்டு, மலர் இருக்கையில் அமர்ந்து போட்டோ சூட் செய்து, விதவிதமாக உடை அணிந்து கொண்டிருக்கிறார். அவர் விதவிதமாகச் சூட்டிங் செய்து கொண்டிருக்கிறார், இங்கு விதவிதமாகக் குற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.
இப்போது எங்கே அந்த பள்ளம் என்றுக் கேட்கிற அளவுக்கு சாலைகள் உள்ளது. முதலில் நடந்து போனால் தான் பாதுகாப்பில்லை என்ற சூழல் இருந்தது. இன்றைக்கு சாலையில் காரில் செல்வது கூடப் பாதுகாப்பில்லை. சாலையில் பத்திரமாகப் போகிறோமா என்று பயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அழகில் தான் தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இவர்கள் வேண்டுமென்றே புதிய கல்விக் கொள்கையை மதயானை இன்று சொல்கிறார்கள். எல்லா மாநிலங்களும் புதியக் கல்விக் கொள்கையின் நல்லவற்றை எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழை வளர்க்கிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் தேர்வு எழுதிய 8 லட்சம் பேரில் 8 பேர் தான் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.
மதுரையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தமிழில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இவர்கள்தான் இன்றைக்குக் கேந்திரிய வித்யாலயா பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முயற்சியால் கல்வித் துறையில் தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப் போராடுவோம் என்று முதல்வர் சொல்கிறார். ஏறக்குறைய 18 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள் அப்போது ஏன் கொண்டு வரவில்லை? எனப் பலக் கேள்விகள் உள்ளன. அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது டாஸ்மார்க் ஊழல். அதனால்தான் சனாதனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தத் தம்பி உதயநிதி, சனாதனத்தின் ஒரு பகுதியாக இருக்கிற விருந்தோம்பலுக்குச் சென்று விட்டார்.
சனாதனத்தை பற்றி மோசமாகப் பேசி விட்டீர்கள் அதற்குப் பரிகாரமாகக் கோவிலுக்கு வெளியே அன்னதானத்தைத் தொடங்கி வையுங்கள் என்று யாராவது ஜோசியர் சொல்லியிருப்பார். கோவிலுக்கு அருகில் வருவது மகிழ்ச்சி, கோவிலுக்கு உள்ளே வந்து நீங்கள் தரிசிக்க வேண்டும் என்று கூறினார்.
தவெக சார்பாக எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வரவில்லை. கட்சியின் தலைவர் விஜயிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
தமிழகத்தில் எல்லாமே தோல்வி அடைந்து வருகிறது. ஆனால் அதை முதல்வர் கவனிப்பதாக இல்லை. பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 2026 இல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.