நடப்பு டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18 வது சீசனின் 4-வது லீக் போட்டியில் விசாகப்பட்டினத்திலுள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எய்டான் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.
டக் அவுட்டான ரிஷப் பண்ட்
லக்னோ அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். அவர் 6 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர். அதேநேரத்தில், விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேக் ப்ரேசர், டு ப்ளெஸ்சிஸ் நன்றாக அடித்தளம் அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஜேக் ப்ரேசர் 1 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, பாஃப் டு ப்ளெஸ்சிஸ் 29 ரன்கள் ஆட்டமிழக்க, அபிஷேக் பொரேல் டக் அவுட்டாக, சமீர் ரிஸ்வி 4, அக்சர் படேல் 22 ரன்கள் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஸ்டப்ஸ் (34), அஷுதோஷ் சர்மா (66), விப்ராஜ் நிகாம் (39) ஆகியோர் தூக்கி நிறுத்தினர். இதில் அஷுதோஷ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இப்படியாக 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி வீரர் அசுதோஷ் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 66 ரன்களை குவித்திருந்தார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 210 ரன்கள் என்ற இலக்கை கேசிங் செய்த டெல்லி அணி 65 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.