வீடியோ ஸ்டோரி

ஓடும் ரயிலில் கர்பிணிக்கு நடந்த கொடூரம்.., மகளிர் ஆணையம் கொடுத்த விளக்கம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் மகளிர் என ஒதுக்கீடு செய்யப்பட்ட தனி பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு ஆண் பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.