வீடியோ ஸ்டோரி

1000 மருந்தகங்கள்; திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள “முதல்வர் மருந்தகம்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 51 “முதல்வர் மருந்தகம்” திறக்கப்பட்டது. மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள “முதல்வர் மருந்தகம்” அமைந்துள்ள இடத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.