பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தாய்லாந்தில் இருந்து விலை உயர்ந்த கஞ்சாவை கடத்தி வந்து சப்ளை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவைகள் தாய்லாந்தில் விளையும் விலை உயர்ந்த கஞ்சா என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சா, 100 கிராம் ஒரு லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.