ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர், சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை சுற்றுலா இழந்த வேன் சாலையின் இடதுபுரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக் கொள்ளானதில் வேனின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.