வீடியோ ஸ்டோரி

கோமியம் மருந்தே - IIT Director காமகோடி ஆதாரத்தை வெளியிட்டு மீண்டும் விளக்கம்

கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து  தொடர்பான ஆதாரமான அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகளை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ளார்.

கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளதாக ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அது தொடர்பான  ஆதாரத்தை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டார்.

கோமியத்தை அருந்தினால் உடல்நல அபாயங்கள் ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி தரவுகள் குறித்து நான் படிக்கவில்லை. இது தொடர்பான விவாதம் எழுந்து உள்ளதை நான் நேர்மறையாக பார்க்கிறேன். இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும்.  

இந்திய அளவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வருஷத்தில் எங்களுக்கு பண்டிகை வரும்போது நாங்கள் பஞ்சகவியம் சாப்பிடுகிறோம். நானும் பஞ்சகாவியம் சாப்பிடுவேன் என்று ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து  தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டார்.  கோமியம் குடித்தால் காய்ச்சல் வராது என்பது அமெரிக்க ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.