வீடியோ ஸ்டோரி

வேங்கை வயல் வழக்கு - "CBI விசாரணை தேவை" - திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.

CBI விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என நினைத்து இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.