Divya Satharaj Join DMK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் இவர், 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
மகிழ்மதி இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர், சமீப நாட்களுக்கு முன் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்