அதிமுகவிற்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதாக கூறி அவரது தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை எடுத்துச் சென்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்... அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்!
தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.