வீடியோ ஸ்டோரி

"என் உயிரினும் மேலான..." மீண்டும் உயிர்த்தெழுந்த கலைஞர் குரல்

AI Kalaignar Karunanidhi in DMK Mupperum Vizha 2024 : திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. AI தொழில்நுட்பத்தின் மூலம் பேசியது நேரில் வந்து பேசியது போல இருந்தது.

"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...

தந்தை பெரியார் வடித்த கொள்கையை ஓங்கி ஒலிக்கச் செய்து , கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொருப்பில் அமரச் செய்திருக்கும் தம்பி ஸ்டாலினை எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்புதான்! இந்தியாவின் முன் மாதிரி முதல்வராய், நல்லுலகம் போற்றும் நாயகனாக ஸ்டாலின் விளங்குகிறார்" - முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி(AI Kalaignar Speech at DMK Mupperum Vizha).